ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 29
மதன பரிஹர ஸ்திதிம் மதியே மனஸி முகுந்த பாதாரவிந்த தாம்நி /
ஹரநயன க்ருஷாநுனா க்ருஷோஸி ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே://
மன்மதனே...! என் இறைவனாகிய முகுந்தனின் திருவடித் தாமரைகள் என்றென்றும்
இருக்குமிடமான என்னுடைய இதயத்தில் நீ இருக்கும் எண்ணத்தை அடியோடு
விட்டு விடு...! இதற்கு முன்னரே சிவ பெருமானுடைய கோபத்திற்கு
காரணமாகி, அவருடைய நெற்றிக் கண்ணின் தீ ஜ்வாலைகளால் எரிக்கப்பட்டு
அழிந்திருக்கிறாய்...! என் முராரியின் (நாராயணனின்) சுதர்ஸன
சக்கரத்தின் பராக்ரமத்தை மறந்து விட்டாயா...?
(முரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு முராரி என்ற திருநாமம்)
No comments:
Post a Comment