
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 2
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 2
ஜயது ஜயது தேவோ தேவகீ நந்தநோயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ஸ பிரதீப:/
ஜயது ஜயது மேக ஸ்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வி பார நாசோ முகுந்த: //
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ஸ பிரதீப:/
ஜயது ஜயது மேக ஸ்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வி பார நாசோ முகுந்த: //
தேவகிக்கு குழந்தையாகத் தோன்றிய கண்ணன் வெற்றி கொள்வானாக..! ஆயர் குலத்திற்கே அணியாகிய விளங்கும் க்ருஷ்ணன் வெற்றி கொள்வானாக..! மிருதுவான, தளிர் போன்ற மேனியையுடைய அந்த முகில் வண்ணன் வெற்றி கொள்வானாக..! இந்த பூமியின் பாரத்தை நீக்க அவதரித்த அந்த முகுந்தன் வெற்றி கொள்வானாக..!
(இந்த ஸ்லோகத்தின் மூலமாக குலசேகரர் கண்ணனுக்கு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்கிறார். அனைத்து மங்களங்களுக்கும் மூல காரணமாக விளங்கும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியின் இதயத்தை வென்ற அழகிய மணவாளனாக விளங்கும் முகுந்தனுக்கே வெற்றி என்று ஜெய கோஷம் எழுப்புகிறார்.
பகவானுடைய சரணாரவிந்தங்களே நம் அனைவரையும் காக்க வல்லது. அசையும், அசையா பொருட்கள் அனைத்திலும் வியாபித்து, நீக்கமற நிறைந்திருக்கும், அந்த தன்னிகரற்ற பரம்பொருளாகிய திருமாலுக்கு, நாம் பல்லாண்டு பாட வேண்டும் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம்.)
No comments:
Post a Comment