Holy Trinity

Holy Trinity

Wednesday, January 25, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 3


முகுந்த மூர்த்நா ப்ரணி பத்ய யாசே
பவந்த மேகாந்த மியந்த மர்த்தம் /
அவிஸ்ம்ருதி த்வச் சரணாரவிந்தே
பவே பவே மேஸ்து பவத்ப்ரஸாதாத் //


ஹே முகுந்தா...! உன்னை என்றென்றும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் இது தான்...! அதாவது, என்னுடைய ஒவ்வொரு பிறவியிலும், உன் அருளால், உன் திருவடித் தாமரைகளை மறந்து விடாமல் இருக்க வேண்டும்...! இந்த ஒன்றை மட்டுமே நான் உன்னிடமிருந்து யாசிக்கிறேன்...!


(நாம் பகவானிடம் மிகவும் அற்பமான, உலகாயதன பொருள்களை கேட்காமல், அவனை என்றென்றும் மறக்காமல் இருக்கும் மனத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை குலசேகரர் இங்கு தெரிவிக்கிறார்.

இவரே தன்னுடைய 'பெருமாள் திருமொழி' என்ற பாசுரத் தொகுப்பில் திருவேங்கடமுடையானிடம் தன்னை ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மீனாகவோ, மரமாகவோ, வாயிற் படியாகவோ அல்லது ஏதாவது ஒரு பொருளாகவோ பிறக்க வைத்தாலும், அவன் எழுந்தருளியிருக்கக் கூடிய திருமலையின் சமீபமாகவே தன்னை வைக்கும்படி வேண்டுகிறார்.)

No comments:

Post a Comment