ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 13
பவ ஜலதி மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா: காதரத்வம் /
ஸரஸிஜத்ருஷி தேவே தாவகி பக்தி ரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத் யாவஸ்யம் //
ஓ மனமே...!
பிறப்பு இறப்பு என்பதான இந்த 'ஸம்ஸாரம்' என்ற கடலானது, மிகவும் ஆழமானது; கரை காண இயலாதது; கடக்க முடியாதது...! 'இதனை நான் எவ்வாறு கடப்பேன்' என்று நீ பயப்பட வேண்டியதில்லை...! நரகாசுரனை அழித்த, தாமரைக் கண்ணனாகிய, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தி செய்வாயானால், அது ஒன்றே உன்னை இந்த பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வைத்து விடும்...!
( பகவானிடத்தில் பக்தி செய்வது என்பது, அவனுடைய அருள் இருந்தால் மட்டுமே முடியும்..! தகுந்த குருவிடம் தீக்ஷை பெற்று, அவருடைய அருளுக்கு பாத்திரமானால் மட்டுமே, இறைவனிடத்தில் நம்மால் பக்தி செய்ய இயலும். எதுவுமே ஒரே நாளில் வந்து விடுவதில்லை...! எல்லாவற்றுக்கும் பயிற்சியும், மன ஈடுபாடும் தேவை. குருவின் திருவருளால், மன இருள் நீங்குகின்றது...! அஜ்ஞானம் நீங்குவதால், ஞானம் பிறக்கிறது...! ஞானத்தினால் விவேகம் உண்டாகிறது...! விவேகத்தின் மூலம் இவ்வுலகத்தில் எது உண்மை, எது பொய் என்பது புலப்படுகிறது...! பிறகே, அந்த உண்மைப் பொருளாக விளங்கும் எம்பெருமானிடத்தில் பக்தி பிறக்கிறது...! மேலும், பகவானுடைய தாமரைத் திருவடிகளில் ஈர்ப்பும்; திவ்ய நாமங்களில் சுவையும்; அவன் எடுத்த அவதாரங்களின் லீலைகளையும், திவ்ய மங்கள வைபவங்களையும், கல்யாண குணங்களையும், பராக்ரமங்களையும், பிரபாவங்களையும், கேட்கும் போதும், பாடும் போதும், படிக்கும் போதும், நினைக்கும் போதும், பக்தியானது மேலும் மேலும் வளர்கிறது..!
எடுத்த எடுப்பிலேயே, இறைவனிடத்தில் மனத்தைச் செலுத்துவது என்பது எல்லோராலும் முடியக் கூடிய காரியம் அல்ல..! ஆனால், இடைவிடாத பயிற்சியினால் இது சாத்தியமாகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் கீதையில், பக்தி யோகத்தில்;
"அப்யாஸ யோகேன ததோ மாமிச்சாப்தும் தனஞ்ஜய" (12.9 )
"ஹே தனஞ்ஜய (அர்ஜுனா)..! இடை விடாத பயிற்சியால், என்னிடம் மனதை செலுத்தி, என்னை அடைய முயற்சி செய்.." என்கிறார்.

No comments:
Post a Comment