ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 11
மாபீர் மந்த மநோ விசிந்தய பஹுதா யாமீஸ்சிரம் யாதநா:
நாமீ ந ப்ரபவந்தி பாபரிபவ: ஸ்வாமீ நநு ஸ்ரீதர: /
ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோதநகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம: //
ஹே மூட மனமே...!
நீ தேவையில்லாமல், நரகத்தில் யமனுடைய பல விதமான தண்டனைகளையும், துக்கங்களையும் நினைத்து நினைத்து ஒருநாளும் பயப்பட வேண்டாம்...! பாவம் செய்த பாவிகள் மட்டுமே இவற்றைக் கண்டு பயப்பட வேண்டும்...! அவை நம்மை ஒன்றும் செய்ய முடியாது...! ஏனெனில், நமக்கு அந்த லக்ஷ்மி காந்தனான 'ஸ்ரீ தரனே' மேலான இறைவன்...! எனவே, சோம்பலை விட்டு விட்டு, பக்தியின் முலமாக, மிக எளிதில் நம் வசப்படக் கூடியவனான, ஸ்ரீமந் நாராயணனை த்யானிப்பாயாக...! இவ்வுலகத்திலுள்ள அனைவரின் துன்பங்களையும் துடைக்கின்றவன் அந்த எம்பெருமான்...! அவ்வளவு சக்தியுடையவன் தன்னுடைய ஒரு பக்தனின் துயரைத் தீர்க்க வல்லமை இல்லாதவனா...?
( இங்கு குலசேகரர் 'ஸ்ரீதரன்' என்ற நாமத்தைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது...! பெருமாளின் திருமார்பில் நித்ய வாஸம் செய்பவளான மகாலக்ஷ்மியே 'ஸ்ரீ' என்று அழைக்கப்படுகிறாள்.. திருமகளே அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும், அந்த நாராயணனே தந்தையாகவும் உள்ளனர்.. அந்த 'ஸ்ரீ'- யை தன் மார்பில் தாங்கியுள்ள ஸ்ரீதரனை நாம் சரணமடையும்போது நம் அன்னையாகிய 'ஸ்ரீ'-ன் கருணா கடாக்ஷமானது நம் மீது படுவதால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்குகின்றன..
'ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸுலபம்', என்ற வரி 'சோம்பலை விட்டு விட்டு, பக்தியின் முலமாக, மிக எளிதில் நம் வசப்படக் கூடியவனான', என பொருள் படுகிறது.. நாராயணன் அவ்வளவு எளிதில் அடையப்படக் கூடியவனா..? என்றால், அதற்கு பதில் 'ஆம்' என்பதே...! அவன் பக்திக்குக் கட்டுப்பட்டவன்...! ஸ்ரீமத் பாகவதத்தில், 'அம்பரீஷ சரித்திரத்தில்' நாராயணனே தன்னை 'அஹம் பாக்த பராதீன' அதாவது, 'நான் என் அடியார்களுக்குக் கட்டுண்டவன்' என திருவாய் மலர்ந்தருள்கிறார்...! நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே; சோம்பலை அறவே நீக்கி, உற்சாகத்துடன் பகவானை பக்தியுடன் போற்றி வணங்க வேண்டும்.. சோம்பலே நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.. எனவே, தெளிந்த மனத்துடன் இறைவனை த்யானிக்க வேண்டும்.. 'த்யாயஸ்வ நாராயணம்' என்றதன் மூலமாக 'எங்கும் நிறைந்தும், நம்முள் அந்தர்யாமியாகவும் விளங்கும் நாராயணனை த்யானிக்க வேண்டும்' என்று கூறுகிறார் குலசேகரர். )

No comments:
Post a Comment