Holy Trinity

Holy Trinity

Tuesday, January 24, 2012

Sri Mukunda Mala - 1


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 1

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பாக்த ப்ரியேதி பவலுண்டன கோவிதேதி /
நாதேதி நாக ஸயநேதி ஜகந்நிவாசே
த்யாலபினம் பிரதிபதம் குரு மே முகுந்த //


முகுந்தா (முக்தியை அளிப்பவனே)..! ஸ்ரீ வல்லபா (லக்ஷ்மி நாயகா)..! வரமளிக்கும் வரதா..! தயாபரா (பெரும் கருணையுடையவனே)..! பக்தப்ரியா (அடியார்களுக்கு ப்ரியமானவனே)..! பிறவித் துன்பத்தை நீக்கும் பரந்தாமா..! என்னை ஆளும் நாதா..! ஆதிசேஷனாகிய மஞ்சத்தில் சயனித்து இருப்பவனே..! இப்பிரபஞ்சத்தில் எங்கும் பரந்து விரிந்து உறைந்திருக்கும் ஜகந்நிவாசா..! என்றெல்லாம், எப்போதும் உன் திவ்ய நாமங்களையே பாடுபவனாக (ஜபிப்பவனாக) என்னை வைப்பாயாக..!

(நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளையும், பகவானுடைய நாமங்களின் மகிமைகளையும் எடுத்துக் கூறுவதற்காகவே பாடப்பட்டது 'முகுந்தா மாலா' ஸ்தோத்திரம் ஆகும். இந்த 40 சுலோகங்களும் முகுந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாமாலை ஆகும். இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் கண்ணனின் அழகு, கல்யாண குணங்கள், சம்சாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவர்களுக்கு கண்ணனே கரை சேர்க்கும் தோணி, பிறவிப் பிணிக்கு முகுந்தனே மருந்து என பல உயர்ந்த கருத்துக்களைப் பற்றி பக்தி மணம் கமழ உரைக்கின்றன. இந்த முதல் ஸ்லோகத்தில் பல நாமங்களை எடுத்துக்கூறியுள்ளார் குலசேகரப் பெருமாள்.)

No comments:

Post a Comment