Holy Trinity

Holy Trinity

Friday, March 9, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 6

திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் /
அவதீரித ஸாரதார விந்தௌ
சரநௌ தே மரணேபி சிந்தயாமி //


ஹே நரகாந்தக...! *** ( நரகாசுரனை சம்ஹரித்தவனே...!! )
நீ என்னை சுவர்க்க லோகத்திலோ , நரக லோகத்திலோ அல்லது இந்த பூலோகத்திலோ, எங்கு வைத்தாலும் சம்மதமே...! என் உயிர் பிரியும் அந்திம வேளையிலும், மற்றும் எந்த நேரங்களிலும், சரத் காலத்தில் மலரும் தாமரை மலர்களையும் (தன் அழகிலும் மேன்மையிலும்) தோற்கடிக்கக் கூடிய உன்னுடைய திருவடிகளையே நான் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்...!

*** 'நரகாந்தக' என்ற சொல் 'நரகாசுரனை அழித்தவன்' என்ற அர்த்தத்தில் பொதுவாக வந்தாலும், 'நரக வாசத்தை நீக்குபவன்' என்ற அர்த்தத்தையும் தரும். இங்கு ஆழ்வார், ஸ்லோகத்தில் தனக்கு நரகத்தில் இருந்தாலும் சம்மதம் என்று கூறிவிட்டு, பகவானை 'நரகாந்தக' (நரக வாசத்தை நீக்குபவன்) என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நரக வாசத்தை நீக்குபவனை நாம் என்றென்றும் பற்றிக் கொண்டால், நாம் நரகத்தில் தள்ளப்பட மாட்டோம் என்பது உறுதி..!


( நாம் இந்த பூமியில் செய்யும் செயல்களின் மூலமாக பாவங்களையும், புண்ணியங்களையும் சேர்த்துக்கொண்டு, மரணத்திற்குப் பின் பாவங்களைக் கழிக்க நரகத்திக்கும், புண்ணியங்களைக் கழிக்க சுவர்க்கத்திற்கும் செல்ல வேண்டும். அங்கு, பாவ புண்ணியங்களைக் கழித்தவுடன், மீண்டும் இந்த பூமியில் தள்ளப்பட்டு விடுவோம்.

ஆனால், பூமியில் வாழும் போதே, பகவானுடைய திருவடிகளை நினைத்துக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இறைவனின் சிந்தனை ஒன்றே நம்முடைய பாவ புண்ணியங்களைப் பொசுக்க வல்லது என்பதை இவ்வாறு குலசேகரர் தெரிவிக்கிறார்.)

No comments:

Post a Comment